Sunday 5 May 2013

ஆண்டாளடி




சிறுகதை


விழித்தவுடன் தகரத்தில் அலைந்து பரவிப்படிந்த புகைச்சித்திரத்தை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பின்னரே தான் சமையல் கட்டில் படுத்திருப்பது முனிக்கு உரைத்தது. சட்டெனெ எழுந்து உட்கார்ந்தான். கைலி அவிழ்ந்திருந்தது. அதுவே இரவு போர்வையானது நியாபகம் வந்தது. பின்மண்டை கனத்து பின் வலித்தது. எழ மனமின்றி அப்படியெ அவிழ்ந்த கைலியுடன், தலையை பின் சரித்து, கைகளை பின்பக்கம் ஊன்றி உட்கார்ந்திருந்தான். வலப்புறம் சமையல் மேடையில் எதுவோ கொதித்த சத்தம் கேட்டது. வெகு நேரம் உறங்கிவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு அயர்ச்சியை தந்தது.

காலம்


யம்மா கால் கழுவிவிடு
என்று சட்டையை தூக்கிபிடித்தபடி
கத்திய நேரத்தில்
இறந்து போயிருந்தால்
என் அம்மா

பெற்றவள்

சிறுகதை


பட்டெனெ விழுந்த அடி குமாருக்கு தன்னை யாரோ எதிலிருந்தோ வெடுக்கென பிடுங்கப்படுவதைப்போல் உணர்ந்து, விருட்டென எழுந்து பார்த்தான். அவனுக்கு எரிச்சலும் கோபமும் இருந்தது தவிர 'நான்' உணர்வில்லை. கோபம் கொண்ட அகன்ற விழிகள் அம்மாவைப்பார்த்ததும் பேந்த விழித்தன. விடிகாலை கருநீல இருட்டையும், முற்றத்து விளக்கில் வழிந்த ஒளியின் எச்சத்தையும் தாங்கியபடி ஈரத்தலை பின்னப்படாமல் அம்மா நின்றிருந்தாள்.  முகம் முழுதும் மஞ்சள். பெரிய பொட்டு. முறைத்தபடி இருந்தாள். தன்னுணர்வும் தாயென்றுணர்வும் கொண்ட குமாருக்கு கோபம் பொசுக்கென்று ஓடிப்போனது.

சத்சித் ஆனந்தம்

தமாசு



அந்த மே மாதத்தில், சென்னை சென்ட்ரலில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்து நிற்க, மூன்றாம் வகுப்பு குளிர் சாதப் பெட்டியிலிருந்த்து தன் எடையைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள பெட்டியுடன் நடைமேடையில் புன்னகை தவழ இறங்கினார் ஸோவோவின் சந்நியாசி. டெல்லியில் உயிரியல் ஆசிரியராக வேலை பார்க்கும் நாற்பது வயது நந்திகேசனின் சந்நியாசப்பெயர் தியானத்தாமரை. ழுக்கை லை. ருமனானஉடல். ழுத்தில் ஸோவோ ம் போட்டட்டை மாலை. ஸோவோ ஆசிரமத்தில் அணியக்கூடிய, கழுத்து முதல் பாதம் வரை தொங்கும் வெளிர் மஞ்சள் நிற அங்கி அணிந்திருந்தார்